என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பர்னிச்சர் பூங்காவில் இரும்பு வேலிகள் திருட்டு - 4 வாலிபர்கள் கைது

- புதியதாக பர்னிச்சர் பூங்கா பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில் பர்னிச்சர் பூங்காவில் இருந்த கம்பி வேலிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் புதியதாக பர்னிச்சர் பூங்கா அமைக்கப் படுகிறது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு தோட்டம் அமைத்து அதனை சுற்றிலும் கம்பி வேலிகள் வைக்கப்பட்டுள்ளது.
இரும்பு வேலிகள் திருட்டு
தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்த வெயிலுகாத்த பெருமாள் என்பவர் அங்கு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பர்னிச்சர் பூங்காவில் இருந்த கம்பி வேலிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளியான வெயிலுகாத்த பெருமாள் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தூத்துக்குடி மீளவிட்டானை சேர்ந்த சரண்ராஜ் (வயது23), இசக்கிமுதது (23), சிவலிங்கம் (23) மற்றும் மணி ஆகியோர் இரும்புவேலிகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து இரும்பு வேலிகளை பறிமுதல் செய்தனர்.