என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் மேற்கூரையை பிரித்து நகை, பணம் கொள்ளை
- சேலம் தாதகாப்பட்டி புதுத்தெரு பகுதியில் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.
- வீட்டிலிருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.40 ஆயிரம், செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி சுசிலா (வயது 45). மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பியபோது, மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய மர்மநபர்கள் வீட்டிலிருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.40 ஆயிரம், செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து சுசிலா அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். மேலும் அந்த புகாரில், தாதகாப்பட்டி சண்முகா நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ், ஜாபர்லா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வீட்டின் மேற்கூரையை
பிரித்து நகை, பணம் கொள்ளைவீட்டின் மேற்கூரையை
பிரித்து நகை, பணம் கொள்ளை
Next Story






