search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த எந்திரங்கள் கிருஷ்ணகிரிக்கு வந்தன
    X

    2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த எந்திரங்கள் கிருஷ்ணகிரிக்கு வந்தன

    • தேர்தலின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் இருப்பு வைக்கும் கட்டிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டது.
    • இது எதிர்வரும் 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உட்பட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டசபை தொகுதிகளிலும் 1,880 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    6 தொகுதிகளில் உள்ளடக்கி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உள்ளது. இந்த நிலையில், வருகிற 2024-ம் அண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக நேற்று பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 900 வி.வி.பேட் (வாக்களித்ததை காட்டும் எந்திரம்) போலீசார் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

    இந்த எந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் முன்னிலையில், கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் இருப்பு வைக்கும் கட்டிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டது.

    இது குறித்து அலுவலர்கள் கூறியதாவது:-

    மின்னணு எந்திரங்கள் இருப்பு வைக்கும் கட்டிடத்தில், ஏற்கனவே 2,118 கண்ட்ரோல் யூனிட், 3,606 பேல்ட் யூனிட், 1,706 வி.வி.பேட் எந்திரங்கள் உள்ளன. தற்போது, பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து, 900 வி.வி.பேட் எந்திரங்கள் வரப்பெற்றுள்ளது. இது எதிர்வரும் 2024&ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    அப்போது தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெய்சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி,தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன், காங்கிரஸ் நகர தலைவர் லலித் ஆண்டனி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×