search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஸ்கர் நாயகன் பொம்மன், யானையை கவுரவப்படுத்தி லோகோ
    X

    ஆஸ்கர் நாயகன் பொம்மன், யானையை கவுரவப்படுத்தி லோகோ

    • கடந்த, 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டி நடக்கிறது.
    • குன்னூரில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஊட்டி,

    ஆக்கி இந்தியா அமைப்பு மற்றும் தமிழக அரசு விளையாட்டுதுறை சார்பில், சென்னையில் ஆசிய சாம்பியன் போட்டி, அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்க உள்ளது.

    இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தென்கொரியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் ஆசிய கோப்பை ஆக்கி போட்டிக்கான லோகா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த லோகோவில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்ஆவண படத்தில் நடித்த முதுமலையை சேர்ந்த யானை மற்றும் பாகன் பொம்மன் பெயரை இடம் பெற செய்து கவுரப்படுத்தி உள்ளது ஆக்கி இந்தியா அமைப்பு.

    லோகோவில் யானை ஆக்கி ஸ்டிக் பிடித்து நிற்பது போலவும், பொம்மன் பெயர் தமிழில் எழுத்துக்களாலும் பொறிக்கப்பட்டு லோகா உருவாக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஆக்கி போட்டி கோப்பை மற்றும் லோகோ ஆகியவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு பயணப்பட்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பை மற்றும் லோகோ ஆகியவை இன்று காலை நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வந்தது. இதனை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் வரவேற்று பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். மக்கள் திரண்டு வந்து கோப்பையையும், லோகோவையும் பார்வையிட்டு சென்றனர்.

    இதுகுறித்து ஆக்கி நீலகிரிஸ் அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:-

    கடந்த, 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டி நடக்கிறது. இது மிகவும் பெருமை வாய்ந்தது. அத்துடன் இந்த வருடம் நடக்க உள்ள ஆக்கி கோப்பை போட்டியானது தமிழகத்திற்கு மட்டுமின்றி நீலகிரிக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது வெகு சிறப்பானதாகும்.

    ஆக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் பொம்மன் பெயர், யானை அடங்கிய இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.

    மேலும் ஆக்கி போட்டி கோப்பை, லோகோ உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் முழுவதும் சுற்றுப்பயணமாகி வருகிறது.

    இந்த கோப்பையானது இன்று நீலகிரிக்கு வருகிறது. இதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இங்கிருந்து இந்த கோப்பை ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றார்.

    Next Story
    ×