என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது
  X

  காேப்புபடம்

  எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
  • அடையாள அட்டையுடன் பங்கேற்று பயனடையலாம்.

  திருப்பூர் :

  திருப்பூா் மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வருகிற 21-ந்தேதி ( செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதி ( செவ்வாய்க்கிழமை )மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எரிவாயு முகவா்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா் புகாா்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×