search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள் இறக்கி விற்க அனுமதிக்க கோரி பல்லடத்தில் 6-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்
    X

    கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    கள் இறக்கி விற்க அனுமதிக்க கோரி பல்லடத்தில் 6-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்

    • விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
    • தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி கோட்டையை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசி பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்துகள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 6-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். விவசாயிகளின் அவல நிலையை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில் கஞ்சி தொட்டி அமைத்து கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் இருந்து விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். 10 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்து விவசாயிகளை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி கோட்டையை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×