search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் நகராட்சி பகுதியில் ரூ.1.68 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
    X

    கூடலூர் நகராட்சி பகுதியில் ரூ.1.68 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

    • பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • பொதுநிதி செலவினம் போன்ற பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மங்குழி பகுதியில் மூலதன மானிய நிதிதிட்டத்தின் கீழ் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சமும், பொது நிதியில் இருந்து ரூ.26 லட்சமும் என மொத்தம் ரூ.1.13 கோடி மதிப்பில் 35 மீட்டர் நீளம் மற்றும் 5.15 மீட்டர் அகலத்தில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியினையும், வேடன் வயல் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் 12 மீட்டர் நீளம் மற்றும் 6 மீட்டர் அகலத்தில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியையும், தலைகுந்தா, கல்லட்டி, தெப்பக்காடு சாலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.199 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியையும் நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜல்ஜீவன் மிஷன், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பொதுநிதி செலவினம் போன்ற பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, கூட லூர் வருவாய் கோட்டாட்சியர் முகம்மது குதுரதுல்லா, கூடலூர் நகராட்சி ஆணை யாளர் பிரான்சிஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பொறியாளர் ஆல்துரை, கூடலூர் தாசில்தார் சித்த ராஜ், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×