என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்கு
- முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது புகார் அளிக்கப்பட்டது.
- இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள குப்பம்மாள்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் வினித்ராஜா (24).
இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சின்னக் காளை மகன் முத்துப்பாண்டிக்கும் (28) இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் வினித்ராஜாவுக்கு முத்துப்பாண்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வினித்ராஜா அளித்த புகாரின் பேரில் முத்துப்பாண்டி மீது தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






