search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூஸ்டர் தடுப்பூசி வருகிற 30-ந் தேதி  வரை மட்டுமே இலவசம்
    X

    பூஸ்டர் தடுப்பூசி வருகிற 30-ந் தேதி வரை மட்டுமே இலவசம்

    • உருமாறிய கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை
    • தடுப்பூசி செலுத்த சுகாதார அதிகாரிகள் அறிவுரை

    கோவை,

    கொரோனா நோய்த் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது.

    கொரோனா நோய்த் தொற்று பல்வேறு உருமாற்றங் களை அடைந்த தால் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவு றுத்தப்பட்டது.

    அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    18 முதல் 59 வயதுக்கு ட்பட்டவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    இதனையடுத்து தமிழகத்தில் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது. ஜூலை 15 முதல் அடுத்த 75 நாள்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இந்த நிலையிலில் செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 29 லட்சத்து 12 ஆயிரத்து 580 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 26 லட்சத்து 70 ஆயிரத்து 84 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    ஆனால், பூஸ்டர் தடுப்பூசியை 2 லட்சத்து 49 ஆயிரத்து 107 பேர் மட்டுமே செலுத்திக் கொண்டனர்.

    2-வது தவணை தடுப்பூசி கள் செலுத்திக்கொ ண்டவர்க ளுடன் ஒப்பிடும்போது பூஸ்டர் தடுப்பூசியை மிகவும் சொற்பமான நபர்களே செலுத்திக் கொண்டுள்ளனர்.

    செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ளா தவர்கள் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×