search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடக்கப்பள்ளிக்கு சத்துணவு கூடம் கட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    X

    திறந்த வெளியாக உள்ள சமையல் கூடம்.

    தொடக்கப்பள்ளிக்கு சத்துணவு கூடம் கட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    • 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
    • புதிதாக சமையல் கூடம் எதுவும் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.

    பூதலூர்:

    தமிழ்நாட்டில் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கட்டிடங்கள், சுற்றுப்புறங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதன் அடிப்படையில் பல்வேறு பள்ளி களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பூதலூர் ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த தொடக்கப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.

    பள்ளிக்கு மிக அருகில் பிரதான சாலை அமைந்துள்ளதால் எந்த நேரமும் பயணிகள் பஸ்கள, இரண்டு சக்கர வாகனங்கள், அதிகளவில் சென்று கொண்டிருக்கும் இதனால் சுற்றுச்சுவரை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி திருக்காட்டுப்பள்ளி நூல் நிலையத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மனு கொடுத்தனர்.அப்போது அவர் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விட்டது விரைவில் கட்டப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தின ரிடம்உறுதியளித்தார்.

    இரண்டு மாதங்கள் ஆன பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலையில் இதுவரை சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க பள்ளியில் சத்துணவு சமைப்பதற்கான சமையல் கூடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.புதிதாக சமையல் கூடம் எதுவும் கட்டுவ தற்கான பணிகள் துவங்கப்படவில்லை. நாளை பள்ளிகள் திறக்கப்படும் போது சத்துணவு திறந்தவெளியில் சமைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இது பெற்றோர்கள் மனதில் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளது.பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்பாதுகாப்பாக வந்து செல்வதற்கும், மாற்று ஏற்பாடுகள் மூலம் பாதுகாப்பான முறையில் சத்துணவு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×