search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை-கோவை  வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம்
    X

    சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம்

    • கோவையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 8-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்

    கோவை,

    தொழில் நகரமான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் இன்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் இரவில் சென்னைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவை வழியாகவும் சென்னைக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்கள் என மொத்தம் கோவையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இத்தனை ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ள வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையானது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    எனவே கோவை வழித்தடத்திலும் வந்தே பாரத் ரெயிலை தொடங்கினால் நன்றாக இருக்கும் என பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    தற்போது அவர்களின் கனவு நனவாக உள்ளது. வருகிற 8-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி கோவை-சென்னை இடை யே வந்தே பாரத் ரெயில் சேவையும் தொடங்கி வைக்க உள்ளார்.வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க உள்ள செய்தி கோவை மாவட்டம் மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. இதனை யொட்டி இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. 8 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ரெயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக முற்பகல் கோவை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    பின்னர் கோவையில் இருந்து சென்னைக்கு சோதனை ஓட்டம் நடக்கிறது. மதியம் 12.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரெயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து மாலை 6.40 மணிக்கு சென்னை சென்றடைகிறது.இன்று நடந்த இந்த சோதனை ஓட்டத்தில் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்று ரெயிலில் பயணித்தனர். விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க உள்ளதும், இதனையொட்டி சோதனை ஓட்டம் நடந்ததும் கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கோவை மக்கள் கூறியதாவது:-

    கோவை வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் ேசவை தொடங்கப்பட உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.

    விரைவில் கோவை-பெங்களூரு வழித்தடத்திலும் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் பயணிகள் பாதுகாப்பு மட்டுமின்றி, வழித்தடத்தில் விலங்குகள் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.எனவே ரெயில்வே நிர்வாகம் இதற்கேற்ப ஊழியர்களை பணியில் அமர்த்தி சீரான முறையில் கண்காணிக்க வேண்டும். இந்த ரெயில் சேவைக்கான கட்டணத்தை குறைவாக நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×