என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குப்பைகளை அகற்ற சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு
  X

  சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர். 

  குப்பைகளை அகற்ற சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குப்பைகளை அகற்ற சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
  • வாகனம் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் கொண்டு சென்று மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

  கடையம்:

  தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பஞ்சாயத்து புலவனூர், மாதாபுரம் ,கீழக்கடையம் ,கல்யாணபுரம், நரையப்பபுரம், பொன்மலை நகர் உள்ளிட்ட பல்வேறு சிறு கிராமங்களை உள்ளடக்கியது.

  இங்கு போதுமான அளவு குப்பை அள்ளி செல்ல வாகனம் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் கொண்டு சென்று மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால் குப்பைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

  இதையடுத்து உடனடி தீர்வாக கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தனது சொந்த நிதியிலிருந்து ,டிராக்டர் ஒன்றை வாங்கி பஞ்சாயத்திற்கு குப்பைகளை அகற்ற வழங்கியுள்ளார்.

  சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×