என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செந்துறை அருகே சின்னமுத்தாலம்மன் கோவில் திருவிழா
  X

  சிறப்பு அலங்காரத்தில் சின்னமுத்தாலம்மன்.

  செந்துறை அருகே சின்னமுத்தாலம்மன் கோவில் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செந்துறை அருகே சின்ன முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.
  • அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் மற்றும் மாவிளக்கு எடுப்பதும் தேவராட்டமும் நடைபெற்றது.

  செந்துறை:

  நத்தம் அருகே செந்துறை பகுதியைச் சேர்ந்த பெரிய மல்லநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, பந்தி பொம்மிநாயக்கனூர் ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட சின்ன முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.

  இதில் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், பாரிவேட்டை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் மற்றும் மாவிளக்கு எடுப்பதும் தேவராட்டமும் நடைபெற்றது.

  இந்த விழாவை ஒட்டி சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சின்ன முத்தாலம்மனை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஊர் நாயக்கர் தங்கப்பாண்டியன் பூசாரி தலைமை தாங்கினார்.

  விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர். திருவிழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும் மூன்று கிராம மக்களும் செய்திருந்தனர். அன்று இரவு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

  Next Story
  ×