search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

    • ஒட்டுண்ணிகள் நோய் கிருமிகளின் வகைகளை பற்றி விவசாயிகளுக்கு விளக்கம்.
    • தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த மெட்டாரைசியம்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை துறை சார்பில் வாத்தலைக்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை வகித்து பேசுகையில், பயிர்களில் தீங்கு செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு இயற்கை தந்த நன்கொடை பூச்சிகளின் இயற்கை எதிரிகள். இயற்கை உயிரினங்களை கொண்டு தீங்கு செய்யும் பூச்சி இனங்களை கட்டுப்படுத்துவதற்கு உயிரியல் முறை பூச்சி மேலாண்மை என்று பெயர். உயிரியல் காரணிகளான சாறுண்ணிகள், ஒட்டுண்ணிகள் நோய் கிருமிகளின் வகைகளைப் பற்றி விவசாயிகளிடையே விளக்கி கூறினார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உதவி பேராசிரியர் சுருளிராஜன் பேசியதாவது, ரசாயன பூச்சி மற்றும் நோய் கொல்லி மருந்துகளுக்கு பதிலாக உயிரியல் முறையில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முக்கியத்துவத்தை விவசாயிகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

    மண் மூலம் பரவும் நாற்றங்கால் வேர் அழுகல், வாடல் நோய், இலை கருகல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் புளோரோசன்ஸ், தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த மெட்டாரைசியம், கருந்தலைப் புழு கட்டுப்படுத்த கிரைசொபொலா, மக்காச்சோளம் படைப்புழு கட்டுப்படுத்த வெவேரியா, சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த பச்சை இறகு பூச்சி போன்ற காரணிகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என்றார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புரத்தினம், உதவி வேளாண்மை அலுவலர் பாலசுந்தர், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தமிழழகன், நெடுஞ்செழியன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×