என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆசிரியர் பலி
- இருசக்கர வாகனத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.
திருவையாறு:
திருவையாறு அருகே விஷ்ணம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜேஷ் கண்ணன் (38).
திருவையாறில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.நேற்று மாலை 3 மணியளவில் அவர் தஞ்சாவூரிலிருந்து திருவையாறு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது அம்மன்பேட்டை வெட்டாறு பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
உடனே, ஆம்புலன்சு மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






