என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை- வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை- வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 138.05 அடியாக உள்ளது. 257 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.45 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழையின்போது தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது. அதனைதொடர்ந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று மாலை சாரலாக தொடங்கி விடியவிடிய பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    போடியில் பெய்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் வைகை அணைக்கும் தண்ணீர் வரத்து 685 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 66.86 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1719 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 138.05 அடியாக உள்ளது. 257 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.45 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை 0.5, போடி 16.2, வீரபாண்டி 43, அரண்மனைப்புதூர் 21.4, ஆண்டிபட்டி 25.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×