என் மலர்
உள்ளூர் செய்திகள்

வியாசர்பாடியில் போலி நகையை அடகு வைத்து ரூ.1 லட்சம் மோசடி
- நகையை மீண்டும் சரிபார்த்த போது அது போலி நகை என்பது தெரிந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி தம்பதி குறித்து விசாரித்து வருகிறார்கள்.
பெரம்பூர்:
வியாசர்பாடி கணேசபுரம் எம். எம். கார்டன் பகுதியில் நகை கடை மற்றும் நகை அடகுகடை நடத்திவருபவர் கிருஷ்ணாலால்.இவரது கடைக்கு டிப்-டாப்பாக வந்த தம்பதியினர் 3 பவுன் நகையை அடகுவைத்து ரூ.1 லட்சம் பெற்று சென்றனர். அப்போது அந்த பெண் கவிதா, வியாசர்பாடி பகுதியில் வசிப்பதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் அந்த நகையை மீண்டும் சரிபார்த்த போது அது போலி நகை என்பது தெரிந்தது. இது குறித்து வியாசர்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி தம்பதி குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






