search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்
    X

    திருவள்ளூரில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்

    • தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • சென்னை தரமணியில் உள்ள அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் லதா தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொருளாளர் உமாராணி, பூந்தமல்லி ஒன்றிய நிர்வாகி மாறி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் வாங்கும் பில் முழுமையான தொகை வழங்க வேண்டும்.காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.மூன்று வருடம் பணி முடிந்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    ஏற்கனவே மினி மையத்தில் இருந்து மெயின் மையத்திற்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு 10 ஆண்டுக்கான இன்கிரிமென்ட் தொகை வழங்க வேண்டும். எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளுக்கு அனுபவமிக்க அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். உணவு செலவினங்களுக்கு முன்பணமாக ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிக்கொடை ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். சில்லறை செலவீனம் ரூபாய் 200 வழங்க வேண்டும். பயணப்படி ரூபாய் 400 வழங்க வேண்டும். முறையான சரியான எடைக் கருவிகள் வழங்க வேண்டும் பணிவரன் முறைபடுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேறும் வரை தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 30 ஆம் தேதி சென்னை தரமணியில் உள்ள அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் திரளான அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×