என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை

- திருப்பூர் அடுத்த முதலிபாளையம் சிட்கோ பவர்காடன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்.
- வீடு புகுந்து பைனான்ஸ் அதிபரை சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த முதலிபாளையம் சிட்கோ பவர்காடன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (31). ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். திருமணமான இவர் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக பவர் கார்டன் சிட்டியில் உள்ள தனது அப்பா அம்மாவுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீடு முழுவதும் ரத்த கறை படிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாலசுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் கத்திக்குத்து மற்றும் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தது.
இதனைப் பார்த்த பெற்றவர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் அங்கு பதிவான கைரேகைகளைஆய்வு செய்து பதிவு செய்தனர். இதுதொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பைனான்ஸ் அதிபர் பாலசுப்பிரமணியம் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக யாராவது வெட்டி கொலை செய்தனரா?அல்லது தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகை பணம் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்த கும்பல் அவரை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்ற அடிப்படையில் விசாரணையை முடுக்கி உள்ளனர்.
வீடு புகுந்து பைனான்ஸ் அதிபரை சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
