என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணியில் குழாயில் புழுக்களுடன் குடிநீர் வருவதாக பொதுமக்கள் புகார்
    X

    திருத்தணியில் குழாயில் புழுக்களுடன் குடிநீர் வருவதாக பொதுமக்கள் புகார்

    • புழுக்களுடன் தண்ணீர் வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.சி.என்.கண்டிகை காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு அருந்ததி காலனி அருகே உள்ள மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் பொதுக்குழாயில் குடிநீர் வந்துள்ளது. அதில் புழுக்களுடன் தண்ணீர் வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×