என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தள்ளாத வயதிலும் தளர்வில்லா வலிமையை தந்த அன்னை தீபம் அணைந்து விட்டது- தமிழிசை இரங்கல்
    X

    தள்ளாத வயதிலும் தளர்வில்லா வலிமையை தந்த அன்னை தீபம் அணைந்து விட்டது- தமிழிசை இரங்கல்

    • உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று காலமானார்.
    • பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மழலையாய் பிறந்த மகனை...

    பிறர் மலைப்புற வளர்த்து... உறுதியான

    மலை என பொது வாழ்க்கையில்

    உயரச் செய்து... உலகிலேயே

    உயர்ந்த மனிதராய் உயர்த்தி

    தன் தள்ளாத வயதிலும்... தளர்வில்லா

    வலிமையை... உலகின்

    வலிய தலைவராம்...நம்

    பிரதமருக்கு.. தற்போது மட்டுமல்ல

    பிறந்ததிலிருந்து... அளித்துவந்த

    அன்னை தீபம் அணைந்து விட்டது

    எங்கள் பிரதமரின் அன்பு வெள்ளம்

    மறைந்ததைக் கேட்டு

    எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்

    எதையும் தாங்கும்

    எப்போதும் உள்ள உறுதியை

    இப்போதும் நம் இறைவன் நம்

    பிரதமருக்கு அருளட்டும்...

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×