என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே வேலைக்கு செல்ல கூறியதால் வாலிபர் தற்கொலை
- சேலம் மாவட்டம் வெள்ளைக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் குமார்.
- ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
திருவள்ளூர்:
சேலம் மாவட்டம் வெள்ளைக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் குமார் (20).
இவர் கடந்த சில வருடங்களாக திருவள்ளூரை அடுத்த கீழச்சேரி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
தற்போது தனக்கு வேலை பிடிக்கவில்லை என்று தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடம் கூறி வேலையை விட்டு நின்றார். மீண்டும் ஊருக்கு சென்று விடுவதாக கூறி வந்தார்.
இதை அறிந்த அவரது பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலையை விட்டு நிற்க வேண்டாம் என்றும், அங்கேயே வேலை செய்யுமாறும் போன் மூலம் அறிவுரை கூறினர்.
இதனால் வேலை பிடிக்காத விரக்தியில் இருந்த குமார் கடந்த 14-ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்து போனார்.






