என் மலர்
உள்ளூர் செய்திகள்

திப்ரூகர்-கன்னியாகுமரி இடையே விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- திப்ரூகர்-கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் 25-ந்தேதி மற்றும் 28-ந்தேதி ஆகிய தேதிகளில் திப்ரூகரில் இருந்து ரத்து செய்யப்படுகிறது.
- கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகருக்கு அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி மற்றும் 5-ந்தேதி புறப்பட வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில்:
தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்கிழக்கு ரெயில்வேயில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திப்ரூகர்-கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் 25-ந்தேதி மற்றும் 28-ந்தேதி ஆகிய தேதிகளில் திப்ரூகரில் இருந்து ரத்து செய்யப்படுகிறது. இதே போல் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகருக்கு அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி மற்றும் 5-ந்தேதி புறப்பட வேண்டிய விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story