என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் அருகே அரசு பஸ்சில் பயணியிடம் ரூ.1½ லட்சம் அபேஸ்- இளம்பெண்ணுக்கு வலைவீச்சு
    X

    விருதுநகர் அருகே அரசு பஸ்சில் பயணியிடம் ரூ.1½ லட்சம் அபேஸ்- இளம்பெண்ணுக்கு வலைவீச்சு

    • சங்கரலிங்கம் பயணித்த அரசு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • சங்கரலிங்கம் அருகில் கைக்குழந்தையுடன் இளம்பெண் அமர்ந்திருந்தார்.

    விருதுநகர்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 42).

    இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்துக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது அவர், கொண்டு வந்திருந்த பையில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தார்.

    சங்கரலிங்கம் பயணித்த அரசு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் அருகில் கைக்குழந்தையுடன் இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் அருப்புக்கோட்டை அருகே சென்றபோது அருகில் அமர்ந்திருந்த இளம்பெண் சில்லரையை கீழே தவறி விட்டார். அருகில் அமர்ந்திருந்த சங்கரலிங்கம் அதனை எடுக்க முற்பட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட இளம்பெண் சங்கரலிங்கம் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்தை நைசாக எடுத்து கொண்டு அடுத்த பஸ் நிறுத்தத்தில் அவசர அவசரமாக குழந்தையுடன் இளம்பெண் இறங்கி தப்பினார்.

    பணம் திருட்டுபோனதை கூட அறியாத சங்கரலிங்கம் ஊருக்கு வந்தார். வீட்டுக்கு சென்று பையை பார்த்தபோது அதிலிருந்து பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் தன் அருகில் அமர்ந்து பயணித்த இளம்பெண் திருடியிருக்கலாம் என்ற அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் சங்கரலிங்கம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×