என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே வடதாங்கல் ஏரி ரூ.8½ லட்சம் செலவில் சீரமைப்பு- அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே வடதாங்கல் ஏரி ரூ.8½ லட்சம் செலவில் சீரமைப்பு- அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • மரக்கன்று நடும் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடத்தாங்கல் ஏரியில் சீரமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாப்பாங்குழி ஊராட்சியில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40 ஆயிரத்து 800 மதிப்பில் மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 100 மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.டி.கருணாநிதி கலந்து கொண்டனர்.

    Next Story
    ×