search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை- குற்றாலம் ஐந்தருவியில் 2-வது நாளாக குளிக்க தடை

    • கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்வதால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து குளித்தனர்.
    • நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் மாலை 5 மணிக்கு ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று பரவலாக வீசி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை சொல்லக்கூடிய அளவுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்வதால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து குளித்தனர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் மாலை 5 மணிக்கு ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தொடர்ந்து மெயினருவியிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் இன்றும் மலைப்பகுதியில் கனமழை பெய்வதால், ஐந்தருவி மற்றும் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. மெயினருவியில் ஆர்ச் மீது தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் 5 கிளைகளும் ஒரே கிளையாக தெரியும் அளவிற்கு தண்ணீர் ஆர்ப்பரித்தது.

    அதே நேரத்தில் பழைய குற்றாலம் அருவியில் இன்று நீர்வரத்து சற்று குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை 8 மணிக்கு பிறகு வெள்ளம் சற்று தணிந்ததால் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் ஐந்தருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் இன்று 2-வது நாளாக அந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு மரத்தடிகளும் இழுத்து வரப்பட்டது.

    அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 16 மில்லிமீட்டரும், குண்டாறு அணையில் 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், செங்கோட்டை, தென்காசியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    Next Story
    ×