search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி அணை பகுதிகளில் பரவலாக மழை
    X

    குமரி அணை பகுதிகளில் பரவலாக மழை

    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 34.62 அடியாக உள்ளது.
    • அணைக்கு 420 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 223 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் ஒருபுறம் அடித்துக்கொண்டிருக்க அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று காலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சிற்றாறு-1 அணை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 34.62 அடியாக உள்ளது. அணைக்கு 420 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 223 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 33.75 அடியாக உள்ளது. அணைக்கு 111 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 8 அடியாகவும், சிற்றாறு-2 நீர்மட்டம் 8.10 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 14.70 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீர்மட் டம் 2.30 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 9.50 அடியாக சரிந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 17.2, பெருஞ்சாணி 6.6, சிற்றாறு 1-20, சிற்றார்2-7.4, சுருளோடு 2.6, பாலமோர் 5.2, கன்னிமார் 2.2, முக்கடல் 6.3 புத்தன் அணை 6.

    Next Story
    ×