என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரணியில் குண்டும், குழியுமாக உள்ள சாலை வளைவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- பல்வேறு தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது.
- சாலைகளை தற்காலிகமாக செப்பனிடுமாறு பல்வேறு தரப்பு மக்களும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதி, சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் இந்த பேரூராட்சியில் உள்ள ஜி.என்.செட்டி தெரு, பஜார் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது.
இந்த சாலைகளை தற்காலிகமாக செப்பனிடுமாறு பல்வேறு தரப்பு மக்களும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் ஜி.என்.செட்டி சாலையில் இருந்து புதுவாயல் நோக்கிச் செல்லும் சாலை வளைவு குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளும், ஏராளமான பள்ளி-கல்லூரிக்கு செல்லும் பஸ்கலும், அரசு போக்குவரத்துக் கழக பஸ்களும், தனியாருக்கு சொந்தமான வேன்களும், இரு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றது. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






