என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீஞ்சூரில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.
- 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னேரி:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மீஞ்சூர் வட்டார கிளை சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், ஊக்க ஊதிய உயர்வு, மத்திய அரசு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தியதை போல் மாநில அரசு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சுவர்ணாபாய், வட்டார செயலாளர் மாலினி, பொருளாளர் அலெக்ஸ் டைனீஷியஸ், மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






