என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம்- நகை கொள்ளை
- கருநீலகண்ணன் மட்டும் திரும்பி வந்த போது வீட்டில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
- போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் கருநீலகண்ணன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார்கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். நேற்று காலை அவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்ட மிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 25 பவுன் நகை, வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
இரவு கருநீலகண்ணன் மட்டும் திரும்பி வந்த போது வீட்டில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






