என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் பலத்த மழையின் போது டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
- பொன்னேரி, மீஞ்சூர் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை கொட்டியது.
- மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
பொன்னேரி:
பொன்னேரி, மீஞ்சூர் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை கொட்டியது. அப்போது மீஞ்சூரை அடுத்த அரியன் வாயல் காட்டூர் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. உரிய பராமரிப்பு இல்லாததால் டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி தீப்பற்றி எரிகின்றன. மேலும் மின்வயர்கள் பல இடங்களில் தாழ்வாக செல்கின்றன என்றனர்.
Next Story






