என் மலர்
உள்ளூர் செய்திகள்

120 ரூபாய்க்காக சப்ளையரின் கழுத்தை அறுத்த போதை ஆசாமி
- ஓட்டலில் இருந்தவர்கள் அன்சரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரோஸை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் ஆரிப் நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் மகன் அன்சர் (38). இவர் புதுப்பேட்டை சாலையில் உள்ள ஓட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பைரோஸ் (40) நேற்று மதியம் மது போதையில் ஓட்டலுக்கு வந்து 2 ஸ்பெஷல் புரோட்டா வாங்கி சாப்பிட்டார். அதற்கான பில் தொகை ரூ.120 ஐ அன்சர் கேட்டார்.
அப்போது மது போதையில் இருந்த பைரோஸ் அவரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து சென்றார்.
பின்னர் மீண்டும் இரவு சுமார் 10 மணி அளவில் பைரோஸ் ஓட்டலுக்கு வந்தார். அப்போது அனைவரின் முன்பும் என்னிடம் பணம் கேட்கிறாயா என்று கூறி அன்சரிடம் திரும்பவும் வாய் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்சரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி சரிந்தார்.
ஓட்டலில் இருந்தவர்கள் அன்சரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரோஸை தேடி வருகின்றனர்.