search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 107 புகார்கள் பதிவு
    X

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 107 புகார்கள் பதிவு

    • கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு இதுவரை 63 புகார்களும், சி-விஜில் செயலி மூலம் இதுவரை 44 புகார் என மொத்தம் 107 புகார்கள் வந்துள்ளன.
    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு, செலவின கண்காணிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மொத்தம் 25 பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி, டோல்பிரி எண் ஆகியவற்றில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 107 புகார்கள் வந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு இதுவரை 63 புகார்களும், சி-விஜில் செயலி மூலம் இதுவரை 44 புகார் என மொத்தம் 107 புகார்கள் வந்துள்ளன.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில் 106 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×