search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டி- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
    X

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டி- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

    • ஓபிஎஸ் தரப்பில் வருகிற 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும்.
    • மாநாட்டிற்கு பிறகு மாவட்டந்தோறும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    சென்னை :

    சென்னை கிரின்வேஸ்சாலையில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-

    * ஈபிஎஸ் கூட்டிய பொதுக்குழு தொண்டர்களுக்கு சம்பந்தமில்லாத போலியானது.

    * பொதுக்குழுவை தலைமை நியமிக்கிறது. தலைமையை பொதுக்குழு தேர்வு செய்கிறது.

    * அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்தில் சென்றால் தான் விலகும்.

    * அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போதெல்லாம் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளார்கள்.

    * ஓபிஎஸ் தரப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் கால்பந்தை போல் அலைக்கழிக்கப்படுகின்றன.

    * ஓபிஎஸ் தரப்பில் வருகிற 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும்.

    * மாநாட்டிற்கு பிறகு மாவட்டந்தோறும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    * எட்டு தோல்விகளை சந்தித்தது தான் சூப்பர் எம்ஜிஆர் (ஈபிஎஸ்) செய்த சாதனை.

    இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    * எம்.ஜி.ஆர். வேடத்தில் ஈபிஎஸ்ஸை பார்த்து தொண்டர்களும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.

    * நாளை சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு இருந்தால் சந்திப்பேன்.

    * ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    * கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×