என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் மல்டி லெவல் புதிய கார் பார்க்கிங் அருகே மர்ம கவர் இருந்ததால் பரபரப்பு
- மர்ம கவரைக் குறித்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
- தகவலின் அடிப்படையில் மோப்ப நாயுடன் வந்த வீரர்கள் அதில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையம் மற்றும் உள்நாட்டு முனையம் ஆகிய பகுதிகளை இணைக்கும்
நடுபகுதிகளில் புதிய அடுக்குமாடி மல்டி லெவல் கார் பார்க்கிங் உள்ளது. இதன் அருகே உள்ள பழைய இருசக்கர வாகன பார்க்கிங் உள்ளது. தற்போது இங்கு எந்த வாகனம் நிறுத்தப்படுவதில்லை.
இந்த இடத்தில் பயணிகளுடைய டிராலிகள் மட்டும் இருந்தது. இன்று காலை தனியார் செக்யூரிட்டிகள் பணியில் இருந்தனர். அப்போது ஒரு டிராலியில் மட்டும் ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் கவர் நீண்ட நேரமாக இருந்துள்ளது. இந்த மர்ம கவரைக் குறித்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் மோப்ப நாயுடன் வந்த வீரர்கள் அதில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை செய்தனர்.
பின்பு அதை திறந்து பார்க்கும் பொழுது அதில் ஒரு செல்போன் அட்டைப்பெட்டியில் ஒரு செல்போன் இருந்தது. மேலும் ஒரு ஐடி கார்டு மற்றும் ஒரு சட்டை இருந்தது தெரியவந்தது. அதை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இன்று விமான நிலைய மல்டி லெவல் அடுக்குமாடி புதிய கார் பார்க்கிங்கை மத்திய அமைச்சர் திறந்து வைக்கிறார். அதன் அருகே இந்த மர்ம பை கிடந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.