என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
- வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார்.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் போலீசார் செட்டிப்புண்ணியம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகபடும்படி வந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார்.
இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் தைலாவரம் வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 25), என்பதும் இவர் 2 மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் அவரை கைது செய்தனர்.






