என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்ப்பிணியான மைனர் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு
    X

    கர்ப்பிணியான மைனர் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு

    • பெற்றோர் மகளிடம் சமரசம் பேசி கணவருடன் சேர்ந்து வாழும் படி கூறவே மனமுடைந்த மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
    • சிறுமியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள சின்ன உலகாணியை சேர்ந்த பிளஸ்-2 வகுப்பு மாணவிக்கும் கேரள மாநிலம் வண்டி பெரியார் பகுதியை சேர்ந்த உறவினரான ராஜாவிற்கு (வயது27) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு பின்பு மாணவி கணவருடன் கேரளாவில் குடியேறியுள்ளார். திருமணமான 4 மாதத்திற்குள் அவர்களுக்குள் கருத்து வேறு ஏற்படவே தற்போது மாணவி கணவருடன் கோபித்து கொண்டு கள்ளிக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

    இங்கு அவரது பெற்றோர் மகளிடம் சமரசம் பேசி கணவருடன் சேர்ந்து வாழும் படி கூறவே மனமுடைந்த மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

    மேலும் மைனர் பெண் என்பதால் இது குறித்து கள்ளிக்குடி சமூகநலத்துறை அலுவலர் ரூபிஅருள்மணிக்கு தகவல் கொடுத்தனர். அவர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அவர் 17வயது மைனர் பெண் என்பது தெரியவந்தது. திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது கணவர் ராஜா, அவரது பெற்றோர் சந்திரபோஸ், பேச்சியம்மாள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×