என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டா இல்லாத இடங்களில் வசிப்பவர்களுக்கும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை- அமைச்சர் தகவல்
    X

    பட்டா இல்லாத இடங்களில் வசிப்பவர்களுக்கும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை- அமைச்சர் தகவல்

    • காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 872 பயனாளிகளுக்கு ரூ. 16.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

    நமது முதல்வர், நாளொன்றுக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களின் நல்வாழ்வு எனது லட்சியம் என்று உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே முதல்வர்.

    இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் பொதுமக்கள் பயன் பெற கூடிய வகையில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் ஒன்றியத்தில் பட்டா இல்லா இடங்களில் வசிப்பவர்கள் புதிய மின் இணைப்புகள் வழங்க கோரி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் தந்துள்ளனர். அந்த மனுக்கள் மீது மாவட்ட கலெக்டர் தக்க நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மின் இணைப்புகள் வழங்கிட ஆவன செய்யப்படும்.

    தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் வாக்குறுதிகளாக தரப்பட்டன அதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் சட்டமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்து இன்று மக்கள் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அதைப்போலவே காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ரூ.77.49 கோடி மதிப்பில் 22,251 ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், எம்.எல்.ஏ. எழிலரசன், மாவட்ட ஊராட்ச குழு தலைவர் படப்மபை னோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஸ்ரீதேவி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் திவ்யபிரியா இளமது கலந்து கொண்டனர்.

    Next Story
    ×