என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகே நிலத்தகராறில் கட்டையால் அடித்து பெண் படுகொலை
    X

    மத்தூர் அருகே நிலத்தகராறில் கட்டையால் அடித்து பெண் படுகொலை

    • மாதம்மாளுக்கும், கோவிந்தராஜின் தம்பி சரவணனுக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • நிலத்தகராறில் பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சந்தம்பட்டியை சேர்ந்தவர் மாதம்மாள். இவரது கணவர் கோவிந்தராஜ். இவர் இறந்து விட்டார். இந்நிலையில் மாதம்மாளுக்கும், கோவிந்தராஜின் தம்பி சரவணனுக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    நேற்று இருவருக்கும் பொதுவான சுவற்றில் சரவணன் வைத்திருந்த மின் மோட்டார் இணைப்பை மாதம்மாள் துண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த சரவணனின் மைத்துனர் ரமேஷ் என்பவர் மரக்கட்டையால் மாதம்மாளை சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த மாதம்மாளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து மாதம்மாளின் மகள் மஞ்சு மத்தூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு ரமேசை தேடி வருகின்றனர்.

    நிலத்தகராறில் பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×