என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னார்குடியில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டு பூட்டை உடைத்து 80 பவுன் நகை கொள்ளை
    X

    மன்னார்குடியில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டு பூட்டை உடைத்து 80 பவுன் நகை கொள்ளை

    • கடந்த14 ந்தேதி இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.
    • குடும்பத்துடன் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 56). இவர் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார்.

    இந்நிலையில் கடந்த14 ந்தேதி இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

    பின்னர் நேற்று இரவு குடும்பத்துடன் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 80 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பட்டுப் புடவைகள் உள்ளிட்டவை திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ராமமூர்த்தி மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைத்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.35 லட்சமாகும்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×