என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை- விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
    X

    பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை- விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 2020-ம் ஆண்டு மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறியதை நம்பிய பெற்றோர்கள் அந்த மாணவியை பிரகாசுடன் அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் பிரகாஷ் (வயது 39).

    இவர் செங்கல் சூளையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் திண்டிவனத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

    தம்பதி கூலி தொழிலாளர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரும் அந்த செங்கல் சூளையில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறியதை நம்பிய பெற்றோர்கள் அந்த மாணவியை பிரகாசுடன் அனுப்பி வைத்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மாணவியை பிரகாஷ் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அழுது கொண்டே வந்து தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், விசாரணைகள் முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரகாஷ், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×