என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூவத்தூர் அருகே கார் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி
- வேப்பஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.
- புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் செல்லமுத்து மீது மோதியது.
கூவத்தூர் அடுத்த கடலூரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது41). சென்னை மாநகர பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். இவர் கல்பாக்கத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி சென்றார்.
வேப்பஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் செல்லமுத்து மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
Next Story