என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதி பிறந்த நாள் ஒரு மாதம் கொண்டாட்டம்- தா.மோ. அன்பரசன் அறிவிப்பு
- ராம மூர்த்தி, கமலக்கண்ணன், மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
- பல்வேறு நலத்திட்ட உதவிகளை மிகவும் கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் செயற குழு கூட்டம் அடையாறில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாணவரணி அமைப்பாளர் பிரபு, துணை அமைப்பாளர்கள் கோ.ஜானகிராமன், ராம மூர்த்தி, கமலக்கண்ணன், மணிகண்டன், இன்சமாம் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றினார். அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இளைஞர் அணியை மேலும் வலுப்படுத்துவதற்காக தன்னையே அர்ப்பணித்து கொண்டு அயராது உழைத்து, அதிக அளவில் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்த்து, இளைஞர்களை வழி நடத்தும் இளம் தலைவர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்த நாளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் கழகத்தினரும், இளைஞர் அணியினரும், மாணவர் அணியினரும் நாளை முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை ஒரு மாதம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு உடை வழங்க உள்ளோம். மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம், மாரத்தான் ஓட்டம், கிரிக்கெட், இறகு பந்து, கால்பந்து, கைப்பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசு வழங்க உள்ளோம். மேலும் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மிகவும் கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி நடைபெறும் இளைஞரணி 2-வது மாநாட்டில் காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் அணியினர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.






