என் மலர்
உள்ளூர் செய்திகள்

கனகம்மாசத்திரம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
- கூர்மவிலாசபுரம் ஏரிக்கரை அருகே சிலர் சூதாடுவது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கனகம்மாசத்திரம்:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கூர்மவிலாசபுரம் கிராமத்தில் சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கூர்மவிலாசபுரம் ஏரிக்கரை அருகே சிலர் சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்த போலீசார் கனகம்மாசத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 32), ஹரிபாபு (42), முத்துக்கொண்டாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (41), மதன்குமார் (36), காவேரிராஜபுரத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் (26) மற்றும் ஆந்திர மாநிலம் விஜயபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (44), கோபி (42), ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 38 ஆயிரத்து 520 ரூபாய் ரொக்கம், 8 செல்போன்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






