என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் 2 பேர் கைது
- கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன்.
- காயமடைந்த ராஜசேகரன் தற்போது திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடம்பத்தூர்:
கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 35). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். கடந்த 9-ந்தேதியன்று ராஜசேகரன் அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எச்சில் துப்பும்போது அந்த வழியாக வந்த மேல்நல்லாத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்த அமுல்ராஜ் (28) கருணா (32) மீது பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் ராஜசேகரிடம் தகராறில் ஈடுபட்டு கையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கியதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த ராஜசேகரன் தற்போது திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நடந்த சம்பவம் குறித்து அவர் திருவள்ளூர் தாலுகா
போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து அமுல்ராஜ், கருணா ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.






