search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது போதையில் நடத்தை பற்றி தவறாக பேசியதால் கத்தியால் குத்தி கொன்றேன்- கைதான பெண் வாக்குமூலம்
    X

    மது போதையில் நடத்தை பற்றி தவறாக பேசியதால் கத்தியால் குத்தி கொன்றேன்- கைதான பெண் வாக்குமூலம்

    • 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார்.
    • ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார்.

    சென்னை:

    சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தர் வேல்முருகன். கட்டிட தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்தக்கு அடிமையானார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்து மனைவி வினோதினியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வேல்முருகனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    வயிற்றில் இடது புறத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனின் வயிற்றில் இருந்து ரத்தம் வெளியேறியது.

    ஆத்திரத்தில் கணவரை கத்தியால் குத்திய நிலையில் அதன் பின்னர் போலீசுக்கு பயந்து சிகிச்சைக்காக வெளியில் எங்கும் அழைத்துச் செல்லவில்லை.

    இதனால் 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார். இதில் ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி ஆஸ்பத்திரியில் இருந்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வினோதினியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கணவர் குடித்து விட்டு வந்து தனக்கு தானே கத்தியால் குத்திக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு கணவரை கத்தியால் குத்தி கொலை செய்ததை வினோதினி ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலம் வருமாறு:-

    கணவர் வேல்முருகன், குடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்வார். தற்போதும் அது போன்று குடித்து விட்டு வந்தவர் என்னைப் பற்றி தவறாக பேசி அடித்து உதைத்தார். அப்போது அவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி தாக்கினார். ஏன் இப்படி குடித்து விட்டு வந்து பேசுகிறீர்கள் என்று நான் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. என்னை தாக்குவதையும் நிறுத்தவில்லை.

    இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன். இதில் அவரது உடலில் இருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறியது.

    இதனால் கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு என்னிடம் கூறினார். ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் மருந்து கடையில் மருந்து வாங்கி வந்து சிகிச்சை அளித்தேன். ஆனால் கணவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் மயக்க நிலைக்கு சென்றார். இதனால் பயந்து போய் அவரே கத்தியால் குத்திக்கொண்டதாக நாடகம் ஆடினேன்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது போலீசில் சிக்கி கொண் டேன். ஆஸ்பத்திரியில் எனது கணவரை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதேன். இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு வினோதினி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×