என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓசூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
  X

  ஓசூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
  • ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ஓசூர்:

  ஓசூர் பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி கவிதா (23). இவர்கள் கடந்த 10.10.2022 அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

  இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கவிதாவை அவரது தாத்தா வீட்டில் முகமது விட்டு சென்றார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கவிதா தனது கணவருடன் செல்போனில் பேசினார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கவிதா, நேற்று முன்தினம் பத்தலப்பள்ளியில் வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  அதே போல திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×