என் மலர்
உள்ளூர் செய்திகள்

கனமழை: நாலுமுக்கு எஸ்டேட்டில் 19 சென்டிமீட்டர் பதிவு
- தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
- மாஞ்சோலையில் 13.5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் அங்குள்ள நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் இன்று காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 19 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஊத்து எஸ்டேட்டில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சியில் 15 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 13.5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
Next Story






