search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

    • வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
    • பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி இம்மானுவேல் கீழ தெருவை சேர்ந்தவர் சப்பாணி (வயது 55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற சப்பாணி அந்த பகுதியில் திறந்து கிடந்த ஒரு வீட்டுக்குள் புகுந்துள்ளார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே கணவர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தட்டி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது சப்பாணி தான் போலீஸ்காரர் என்றும், யாரும் என்னை மிரட்ட முடியாது என்றும் கூறிவிட்டு சென்றார்.

    இது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் கூமாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சப்பாணி மீது பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள சப்பாணியை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×