என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுவாஞ்சேரியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
    X

    கூடுவாஞ்சேரியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

    • செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பெரிய ராமசாமி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்.
    • கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை சரமாரியாக வெட்டிய 4 பேரை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பெரிய ராமசாமி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29), நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி ரெயில்நிலையம் அருகே உள்ள

    விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.

    முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த கமல், அப்பு, அருண், கார்த்திக் ஆகியோர் பிரபாகரனை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால்

    சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பிரபாகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள

    ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை சரமாரியாக வெட்டிய 4 பேரை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×